1200 லிட்டர் விஷச்சாராயம் ரூ.66,000க்கு விற்பனை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


1200 லிட்டர் விஷச்சாராயம் ரூ.66,000க்கு விற்பனை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!!

சமீபத்தில் விஷச்சாராய குடித்து விழுப்புரத்தில் 13 நபர்களும், செங்கல்பட்டில் 8 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மெத்தனாலை விற்பனை செய்ததாக இரண்டு மாவட்டத்திலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

இதோடு நிறுத்தாமல் இந்த இரண்டு நபர்களுக்கும் விற்பனை செய்த நபர்கள் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷச்சாராயம் சென்னை வானகரம் ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.

அதாவது, ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி இந்த தொழிற்சாலையை கடந்த 2018ஆம் ஆண்டு வாங்கி, பின்னர் கொரோனா காரணமாக பயன்படுத்த இயலாமல் போனதால் 1200 லிட்டர் விஷச்சாராயத்தை பாண்டிச்சேரியைச் சேர்ந்த பரகதுல்லா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66,000க்கு விற்பனை செய்துள்ளார். 

இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷச்சாராயம் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக விஷச்சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷச்சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். 

இவர் அதில் 400 லிட்டர் விஷச்சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விஷச்சாராய சம்பவத்தில் ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனி அதிபர் இளைய நம்பி என்பவரும், விஜியும் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் இந்த விஜி மீது 6 திருட்டு வழக்குகளும், 5 மது விலக்கு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1200 poison liquor sale sixty six thousand police officers info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->