தமிழகத்தில் 2 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்பு 1063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று 25 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1359 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

621 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.  கடந்த சனிக்கிழமை 692 ஆக இருந்த கொரோனா தொற்று, தொடர்ந்து அதிகரித்து 5 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. சென்னையில் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1359 corona case in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->