தமிழகத்தில் இன்று 14வது தடுப்பூசி முகாம்.. 50,000 இடங்களில் நடைபெற உள்ளது..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 14வது தடுப்பூசி முகாம்  இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.

தமிகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்கள் போன்றவற்றில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுகிறது. இதுவரை  தமிழகத்தில் 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளது.

இன்னும்,  1.09 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை எனவும் 93.4 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்தி கொள்ளவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனால், இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 th mega Vaccine Camp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->