பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம் - பள்ளி தாளாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!
15 days court custody to school principal for girl died issue in madurai
மதுரை மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிண்டர் கார்டன் ப்ளே ஸ்கூல் என்ற இளம் மழலையர் பள்ளியை திவ்யா என்பவர் நடத்தி வருகிறார். தற்போது இந்த பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஓவியம், பேச்சு, விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கு, கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் படித்து வந்தனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரின் மகள் ஆருத்ரா கோடைகால பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற ஆருத்ரா, சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடினார். இதைபார்த்த மற்ற குழந்தைகள் பள்ளி ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே ஓடிவந்த ஆசிரியைகள், தீயணைப்புத் துறையினருடன் சேர்ந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். ஆனால், குழந்தை ஆருத்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் ஆசிரியைகள், பள்ளிக்கூட பணியாளர்கள் என 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மழலையர் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
15 days court custody to school principal for girl died issue in madurai