தீபாவளி பண்டிகை - தமிழகம் முழுவதும் 16000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
16000 special bus run in tamilnadu for deepawali festival
உலகம் முழுவதும் வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 10,975 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,920 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவம்பர் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 9,467 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, அரியலூர், நாகை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கும், கே.கே நகரில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோல், பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்யும் பொருட்டு முன்பதிவு செய்து கொள்ள tnstc official app மற்றும் http://www.tnstc.in உள்ளிட்ட இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அரசு பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
16000 special bus run in tamilnadu for deepawali festival