சென்போன் பறிப்பில் ஈடுப்பட்ட சிறுவர்கள்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
2 boys arrested Who involved robbery
செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பட்டினம்பாக்கம் பவானிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் என்பவர் கடந்த 10-ந்தேதி இரவு மெரினாகடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மொபைடில் வந்தவர்கள் அவரின் செல்போனை பறிக்க முயற்சி செய்தனர்.
அதனை கவணித்த அவர் சுதாரித்து கொண்டதால் செல்போன் பறிப்பு தோல்வியில் முடிந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுல்11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவணையும் பெசன்ட் நகரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடையாறு பகுதியில் ஒருவரிடம் செல்போன் பறித்து தப்பியதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிறுவர்கள் இருவரையும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
English Summary
2 boys arrested Who involved robbery