பிணமாக மீட்கப்பட்ட கள்ளகாதல்ஜோடி.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். சரஸ்வதி அருகில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல பணிக்கு சென்ற செந்தில்குமார் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பு ஏற்படாததால் உறவினர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அங்கு சென்ற உறவினர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை. இதனால் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரஸ்வதி மற்றும் முனியாண்டி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 persons committed suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->