திருவண்ணாமலை தீபத்திற்காக 3500 கிலோ ஆவின் நெய் கொள்முதல்!
3500kg of aavin ghee purchased for Tiruvannamalai Deepam
திருவண்ணாமலை மாவட்ட அருணாச்சலேஸ்வரர் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் நெய் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 3500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/thiruvannamalai deepam-6puc7.png)
அதே போன்று கோவில் நிர்வாகத்திடம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நேரடியாக நெய் காணிக்கை செலுத்த தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/aavin 12.png)
மேலும் மகா தீபத்திலிருந்து சேகரிக்கப்படும் தீப மை ஆருத்ரா தரிசனத்தன்று நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அதேபோல் பக்தர்களுக்கு ஒரு பாக்கெட் ரூ.10 என விநியோக செய்யப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
3500kg of aavin ghee purchased for Tiruvannamalai Deepam