ஊட்டி : 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - சுற்றுலா சென்ற 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா சென்ற 5 பேர் காயமடைந்தனர்.

சென்னை மதுராந்தகத்தை சேர்ந்த உறவினர்களான அருணகிரி, சம்பத், செந்தில், சத்தியா, பூவனம் ஆகிய 5 பேரும் நீலகிரிக்கு சுற்றுலா சென்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து அவர்கள், சுற்றுலா முடித்துக் கொண்டு நேற்று காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது மரப்பாலம் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் காயமடைந்தனர்.

இதையடுத்து அவ்வழியாக வந்த தனியார் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவர்கள் பள்ளத்தில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 tourists injured in Car overturns in a 100 feet ditch near Ooty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->