தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுதலை!
7 Tamil Nadu fishermen freed from Sri Lankan prison
தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை பெற்று இராமேசுவரதிற்கு இன்று காலை வந்தடைந்தார்,
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின், செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளுடன் நெடுந்தீவு அருகே அனைவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த ஜுலை 23-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், மீன் பிடிக்க சென்ற இந்த படகுகளிலிருந்த ஆரோக்கிய ஹரி கிருஷ்ணன்(50), சேகர்(40), யாகோப்(29), ராதா(44), முத்துராமலிங்கம்(65), சகாய ராபர்ட்(49), பொன் ராமராஜ்(26), ராம்குமார்(24), லிபின் சாய்(25) ஆகிய 9 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்கள் சிறைபிடிக்க பட்டனர்.
மேலும் ஊர்காவல்துறை நீதிமன்றம் ஆக 29-ம் தேதி அன்று, சிறையில் இருந்த 7 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க வந்தால் மீண்டும் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது. அதன்படி , விசைப்படகுகளை ஓட்டிய ஓட்டுநர்களான ஹரி கிருஷ்ணன் மற்றும் சகாய ராபர்ட் ஆகிய 2 பேருக்கு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, இலங்கை கடற்படையினரிடம் இருந்து விடுதலை செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். இதன் பின், மீன்வளத்துறையினர் மூலம் தமிழக மீனவர்கள் 7 பேரும் தனி வாகனத்தில் இராமநாதபுரம் மாவட்டம்
இராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை காலை அழைத்து வரப்பட்டனர்.
English Summary
7 Tamil Nadu fishermen freed from Sri Lankan prison