வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பிரபல யூடியூபர் கைது..! சைபர் க்ரைம் போலீசார் அதிரடி..!! - Seithipunal
Seithipunal



'பிரியாணி மேன்' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக். இவர் கடந்த சில தினங்களாகவே யூ டியூப் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் அதிகளவில் பேசப்பட்டு வரும் நபராக இருக்கிறார். இதற்கு காரணம் அபிஷேக், தனது சக யூடியூபர்கள் குறித்து சகட்டு மேனிக்கு தரக்குறைவான விமர்சனம் செய்து அதை, தனது 'பிரியாணி' மேன் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருவதே காரணம் ஆகும்.

குறிப்பாக யூடியூபர் இர்ஃபான் குறித்து கண்டபடி அவதூறாக பேசி அபிஷேக் வெளியிட்டு இருந்த வீடியோவிற்கு இர்ஃபானும் சிறப்பான பதிலடி கொடுத்திருந்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் பாப்புலராக இருக்கும் 'டைலர் அக்கா' ஆபாச வீடியோ வெளியிடுவதாக பிரியாணி மேன் அபிஷேக் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். 

இதனால் டைலர் அக்கா மற்றும் இர்ஃபானின் ரசிகர்கள் அபிஷேக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அபிஷேக்கை அவரது தாய் வந்து காப்பாற்றுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி, பலராலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. 

இந்நிலையில் தான் இன்று பிரியாணி மேன் அபிஷேக் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னையில் சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். பெண் ஒருவர், தன்னைப் பற்றி அபிஷேக் தொடர்ந்து அவதூறாக கருத்து தெரிவிப்பதாக புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த அதிரடி கைது சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Fame Youtuber Arrested in Chennai By Cyber Crime Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->