தர்மபுரி || சட்டவிரோதமாக கருகலைப்பு செய்ய உதவியவர் கைது..!
A man arrested in Dharmapuri
சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவத்தில் செவிலியரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, நேற்று முன் தினம் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வதாக 7 பேரை தருமபுரி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய செவிலியர் கற்பகம் என்பவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், விஜயகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிட, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதாகியுள்ள சுதாகர், சதீஷ்குமார் ஆகிய இருவரும் ஏற்கனவே ஏஏக்னவே இதே போன்று சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தது குறிப்பிடதக்கது.
English Summary
A man arrested in Dharmapuri