திருச்சியில் தொடங்கவிருக்கும் ஆவின் பால் பவுடர் தொழிற்சாலை..!
Aavin milk powder factory to start in Trichy.
ஆவின் நிறுவனம் திருச்சியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பால் பவுடர் தொழிற்சாலை அமைப்பதற்கான முயற்சியில், இறங்கியுள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் பவுடர் தயாரிக்க, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளதால், தற்போது பால் கொள்முதல் அதிகரித்து உற்பத்தி குறையும் நிலையில், பால் பவுடர் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்த நேரங்களில், தனியார் நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால், ஆவின் நிறுவனத்திற்கு நெருக்கடி மட்டுமின்றி செலவும் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆவின் நிறுவனம் திருச்சியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பால் பவுடர் தொழிற்சாலை அமைக்க, முடிவெடுத்துள்ளது.
இந்த தொழிற்சாலைகளின் கட்டுமான செலவிற்கு ஆவின் நிறுவனம் 'நபார்டு' வங்கியிடம் கடனுதவி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக,ஆவின் நிறுவனம் தேசிய பால்வள வாரியத்தின் தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளது.
தேசிய பால்வள வாரியத்தின் மூலமாக, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதனை நபார்டு வங்கியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கியில் கடனுதவி உறுதியான பிறகு, ஆவின் நிறுவனம் கட்டுமானப் பணிகளை நடப்பாண்டிலேயே துவக்க முடிவு செய்துள்ளது.
English Summary
Aavin milk powder factory to start in Trichy.