கார்களில் கட்சி கொடி இருப்பதற்கு எதிராக நடவடிக்கை - உயர்நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


தனியார் வாகனங்களில் காவல் துறை, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்’ என்று ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிப்பில் இருந்து, மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் சீனிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு, நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கார்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் பிரதாப், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களில் கட்சி கொடி வைத்திருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றுத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

action against political party flag fly in car


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->