1 கோடிக்கூட குடுப்பாங்க.." உங்களால் கள்ளசாராயத்தை  எல்லாம் ஒழிக்க முடியாது " - நடிகர் ரஞ்சித்! - Seithipunal
Seithipunal


கோவை : உங்களால் கள்ளசாராயத்தை  எல்லாம் ஒழிக்க முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா என நடிகர் ரஞ்சித் கள்ளசாராய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்குனர் எடுத்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம்பாளையம். இத்திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்கங்களில் வழியாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மலிவான விலையில் அதிக மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்து உயிர் இழந்தவர்கள் இங்கு என்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக்க உயர்ந்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் பேசுகையில், தேர்தல் வர 20 மாதங்கள்  மட்டுமே உள்ளன. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூட கொடுக்க வாய்ப்புள்ளது.  

கள்ளக்குறிச்சியில் கலாச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. கள்ளசாராயம் குடித்து இறந்துவிட்டதாக கோவப்படுகிறார்கள். நம்,நாடுகளில் திருப்பியபக்கமெல்லாம் மது கடைகளை திறந்து வைப்பது தவறாக தெரியவில்லையா என்று கூறினார்.

உங்களால் கள்ளசாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா எப்படி கள்ளச்சாரயத்தை  ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ranjith press meet in Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->