அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் திடீர் தீ விபத்து: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


ஈரோடு, வாணிபுத்தூர் பேரூராட்சி 12வது அ.தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் பழனிசாமி என்கிற ஹரிராம். அதே பகுதியில் உள்ள ஜே.ஜே.நகரில் இவரது வீட்டில் திடீரென புகை வந்துள்ளது. 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது வீடு முழுவதும் தீ வேகமாக பரவி எரிய தொடங்கியது. 

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

வீட்டை சுற்றியும் தென்னங்கீற்று வேயப்பட்டு மேற்கூரை முழுவதும் தகரத்தாள் அமைக்கப்பட்டு இருந்ததால் தீ வேகமாக வீடு முழுவதும் பரவி எரிந்தது. 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த பயங்கர தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. இருப்பினும் வீட்டில் இருந்த டிவி, பீரோ, ரூ. 60 ஆயிரம் பணம், பேங்க் பாஸ்புக், துணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகி சாம்பல் ஆனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அ.தி.மு.க கவுன்சிலர் வீடு திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK councilor house Sudden fire accident Police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->