சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ மரணம்.! சோகத்தில் அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் இன்று காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, இந்தக் கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி நிர்மலா காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் எம்எல்ஏ ரவிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த ரவிக்குமாரின் எதிர்பாராத மறைவு கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex mla ravikumar passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->