சட்டம் ஒழுங்கை காக்க டாஸ்மாக் கடைக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியரின் உத்தரவு! - Seithipunal
Seithipunal


நாளை உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடை மற்றும் இரண்டு மனமகிழ் மன்றங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். 

மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alanganallur Jallikattu TASMAC leave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->