48 மணி நேரம் மட்டுமே கெடு.. மே15-ல் சாலை மறியல் போராட்டம்.. அண்ணாமலையின் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு எழுதியவர்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு பாஜக சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டேன். ஆசிரியர் பணி நியமனம் குறித்து போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டிருக்கிறது. 

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்ற அரசாங்க ஆணை 149ஐ அமல்படுத்தத் துடிக்கிறது. 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசாணை 149ஐக் கைவிட்டு, நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக சார்பாக ஏற்கனவே 12/02/2022 மற்றும் 10/04/2023 ஆகிய தேதிகளில் அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம்.

ஆசிரியப் பணி எனும் உன்னதமான பணியில் இருக்கும் சகோதர சகோதரிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து அவர்களை அலைக்கழிக்க வேண்டாம் என்றும் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை சந்தித்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை "சென்னை டிபிஐ வளாகத்தில் 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்கள் விவகாரத்தில் 48 மணி நேரத்திற்குள் அரசு முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு முடிவெடுக்காவிட்டால் மே 15ஆம் தேதி பாஜக சார்பில் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai announced road blockade protest on May15 for teachers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->