பேருந்துகளில் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபொது தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில், பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, சென்னையில் பெண்களின் பயணம் 69 சதவீதம் அளவுக்கு பெண்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத சிறப்பான திட்டம் ஆகும். இலவச பேருந்து பயண திட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாக உள்ளது.

அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 பேருந்துகளில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த பேருந்துகளை சரி செய்து வருகிறோம்.  என்று அவர் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrangement to issue tickets through automatic machines in buses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->