மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை சிஎம்டிஏ எல்லை வரை இயக்குவதற்கு அனுமதித்து, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில், "ஒப்பந்த ஊர்திகள் என்ற அடிப்படையில், சென்னை நகர வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரின் ஒப்புதல் அவசியம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை பெருநகரின் எல்லையானது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், சென்னை பெருநகர எல்லை பகுதிகளுக்குச் சென்றுவர தடையில்லை. 

ஆகவே, வரும் காலங்களில் சென்னை பெருநகர எல்லை பகுதிகளில் பயணிக்கும்படி அனுமதியளிப்பதாக குறிப்பிட்டு, ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாக வீடுகளுக்கோ, தொழில் ரீதியாகவோ சிஎம்டிஏவால் வரையறுக்கப்பட்ட சென்னை பெருநகர எல்லைக்குள் ஆட்டோக்களால் தடையின்றி சென்று வர முடியும்.

அதன்படி, சென்னை பர்மிட் ஆட்டோக்களை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை வரை இயக்கலாம். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வரை பயணிகள் சென்னை ஆட்டோக்களில் பயணிக்க முடியும். அப்படி செல்லும் ஆட்டோக்களுக்கு எல்லை தாண்டியதாக இனி அபராதம் விதிக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய உத்தரவுக்கு தமிழ்நாடு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

autos permit extension to cmda road


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->