கேக் தயாரிப்பில் அடியெடுத்து வைக்கும் ஆவின் நிறுவனம்.!! - Seithipunal
Seithipunal


அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் இந்தமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேக் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும்  பொங்கல் போன்ற பண்டிகைக்கு பல்வேறு விதமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம் இந்த முறை கேக் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. 

அதுமட்டுமல்லாமல், 5 சுவைகளிலும், தனியார் கேக்கை விட மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேக்கிற்கான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

இந்த கேக் சென்னையில் உள்ள சில முக்கிய ஆவின் பார்லர்களில் அதுவும், கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான்  விற்பனை செய்யப்பட உள்ளது. 

இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுப்பையா தெரிவித்ததாவது:- "இந்த மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆவின் சார்பில் ஐந்து சுவைகளில் கேக் தயாரிக்கப்பட உள்ளது. இது தவிர பிளம் கேக்கும் தயாரிக்கப்பட உள்ளது. மற்ற நிறுவனங்களை விட மிகுந்த தரத்துடன் விலை குறைவாக விற்பனை செய்யப்படும். 

இதையடுத்து, பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவரும் நெய்யை பயன்படுத்தும் விதமாக 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது 100 கிராம் நெய் பாக்கெட் 10 ஆயிரம் தான் தயாரிக்கப்படுகிறது. சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் பண்ணை நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் தினமும் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avin company start cake production


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->