ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்கு! கெடு விதித்த உயர்நீதிமன்றம்! 200 ச.அடிக்கு ஓகே சொன்ன தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது என்றும், நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் இன்றைய உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பெரம்பூரில் சுமார் 7500 சதுர அடி நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவரின் மனைவி பொற்கொடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அவரின் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது போல் தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது, ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 2000 சதுர அடி நிலம் ஒதுக்க தயாராக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்க்கு நீதிபதி பவானி சுப்பராயன், குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசு தரப்பில் தரப்படும் புதிய இடம் தொடர்பாக அரசிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு அளிக்கலாம். மனுதாரர் பொற்கொடி அளிக்கும் மனுவை பரிசளித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்.

நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது என்று தெரிவித்தார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bahujan Samaj Party Armstrong case update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->