வடகிழக்கு பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
IMD report North East monsoon
அக்டோபர் 14ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அடுத்த 15 நாட்களுக்கு உண்டான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், மத்திய பிரதேசம்,குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை விலகி உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வருகின்ற 14, 15ஆம் தேதிகளுக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
IMD report North East monsoon