கடற்கரையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்: காரணம் என்ன? மாநகராட்சி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டது. 

20 விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரையாமல் கரை ஒதுங்கிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் பட்டினபாக்கம், சீனிவாசபுரம், காசிமேடு உள்ளிட்ட பல இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. 

சிலைகள் கரைக்கப்பட்ட பகுதிகளில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை ஒதுங்கியுள்ளன. 

இந்நிலையில் நேற்று பட்டினபாக்கம் பகுதி மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, 'சென்னையில் விநாயகர் சிலை 4 இடங்களில் கரைக்கப்பட்டாலும் பட்டினப்பாக்கத்தில் தான் அதிக அளவில் சிலைகள் கரைக்கப்பட்டன. 

அவற்றில் 50 சிலைகள் கரை ஒதுங்கி உள்ளன. 20க்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் கடலுக்குள் செல்லாமல் உள்ளது. கரை ஒதுங்கிய பெரிய சிலைகளை கரைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கரை ஒதுங்கியுள்ள சிலைகளில் இணைக்கப்பட்டுள்ள கட்டைகள் போன்றவற்றை அகற்றப்பட்டு வருகிறது. இப்பணிகளை தூய்மை பணியாளர்கள் மற்றும் மீனவ தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

பூக்கள், கட்டைகள் போன்ற 40 டன் கழிவுகள் இப்பகுதியில் அகற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beach ashore washed Ganesh idols Corporation action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->