நீதிபதி வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பாஜகவினர்.‌. 43 பேர் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


நீதிபதி வீட்டின் முன்பு போராட்டம் நடந்த பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, மதுரை எம் பி வெங்கடேஷனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் அடிப்படையில் பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை போலீசார் கைது செய்து ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம் சங்கரன் முன்பு ஆஜர் படுத்தினார். இதில் அவரை வரும் ஜூலை ஒன்றாம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும் அங்கு பாஜகவினர் கூடி போராட்டம் நடத்தினர். இது குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து பாஜக மாவட்ட தலைவர் மாவட்ட பார்வையாளர் உள்ளிட்ட 43 பேர் மீது தலைக்குலர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP protest in judge house case filed against 43 BJP admins


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->