ஊஞ்சல் விளையாடியபோது நேர்ந்த சோகம்.! சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் ஊஞ்சல் விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு வெங்கிடுசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ். இவரது மனைவி சகிலாபானு. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மகன் சாகுல் ஹமீது (12) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான்.

இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வந்த போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனால் இருவரும் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் கதவை திறக்காததால் அமீர் அப்பாஸ் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்பொழுது, சாகுல் ஹமீதின் ஊஞ்சல் கட்டி விளையாடும் சேலையில் கழுத்து எடுக்கப்பட்ட நிலையில் தொங்கி கிடந்துள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக மகனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy dies after getting strangled in saree while playing on swing in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->