வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்த கார் - நொடிப்பொழுதியில் அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னையைச் சேர்ந்த கோகுல் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அதன் படி அவர்கள் இன்று முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டுரசித்துவிட்டு ஊட்டிக்கு வந்துள்ளனர். 

இதையடுத்து அவர்கள், பிங்கர் போஸ்ட் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, கார் திடீரென கோகுலின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதியது. உடனே கோகுல் காரை நிறுத்த முயன்றுள்ளார். 

ஆனால் கார் தடுப்புச் சுவரையும் தாண்டி அருகில் இருந்த வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிவந்த கோகுல், காரில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருந்த பெண் ஆகியோர் எந்தவித காயமும் இல்லாமல் உயிர்  தப்பினர்.

இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேற்கூரை மீது பாய்ந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car accident in neelagiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->