ஆன்லைன் விளையாட்டு தடைச்சட்டம்! தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! மத்திய அரசு வாதம்!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டு தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிய நிலையில் நீண்ட இதுவரைக்கும் பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்தது.

இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்கில் முதல் விசாரணை ஏற்கனவே முடிவுற்ற நிலையில் இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு சிலர் உயிரிழக்கிறார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த விளையாட்டையும் குறை கூற முடியாது. 

மேலும் திறமைக்கான விளையாட்டை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக கொண்டுவர முடியாது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு  எந்த புள்ளிவிவரங்களும் இல்லை" என வாதம் முன்வைக்கப்பட்டது. அதேபோன்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் விளையாட்டு சட்டத்தின் மூலம் சூதாட்டங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை" என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தினை முன் வைத்தார். அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் பதில் வாதத்திற்காக இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt argue that TNGovt has no authority to bring online gaming ban law


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->