மத்திய அரசின் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
Central govt jobs tamilnadu govt free coaching apply Last day of today
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு போட்டி தேர்வுகள், வங்கி தேர்வுகள் மற்றும் குடிமை பணிகள் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக தமிழக அரசு சிறந்த பயிற்சி அளிக்க உள்ளது.
இந்த நிலையில் நான் முதல்வன் போட்டி தேர்வில் பங்கேற்க http://naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
இந்த தேர்வின் மூலம் மாவட்டத்திற்கு 150 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பானது வரும் மே 25ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.
English Summary
Central govt jobs tamilnadu govt free coaching apply Last day of today