அதிகரிக்கும் பயணிகள் கூட்டம் - வந்தே பாரத் ரெயில் 16 பெட்டிகளாக மாற்றம்.!
chenai to nellai vande bharat train change change 16 coaches
இந்தியாவில் தற்போது பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை எழும்பூா்- நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது .
7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டி என்று மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு நெல்லையை அடைகிறது.
இந்த நிலையில் , பயணிகள் கூட்டம் அதிகமாகி வருவதால் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளதாவது:-
சென்னை எழும்பூா்-நெல்லை இடையே இயக்கப்படும் 'வந்தே பாரத்' விரைவு ரெயிலில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப நெல்லை பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதிசெய்து கொள்ள வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளது.
English Summary
chenai to nellai vande bharat train change change 16 coaches