சாதி கலவரத்தைத் தூண்டி, அமைதியை குலைக்க முயலும் விசிக + பா.ரஞ்சித் கும்பல்! அம்பலமானதும் அமைதி! விளாசிய அருள் இரத்தினம்!
Caste politics VCK Pa Ranjith Fake News
பாமகவை சேர்ந்த அருள் இரத்தினம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அண்ணல் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர் சாதியவாதியா? விசிக பதில் சொல்லுமா?"
பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் கிராமம் அம்பேத்கர் தெருவின் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை கடந்த 10.11.2024-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர்.
இதனையடுத்து, "புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து" விசிகவினர் பெரம்பலூர், கடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். நீலம் பண்பாட்டு மையத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், "அரும்பாவூர் காவல் ஆய்வாளர் திருமதி.கயல்விழி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கிரிதாஸ், தேவேந்திரகுல தெரு, வெங்கலம் கிராமம், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்பது தெரியவர மேற்படி எதிரியை கைது செய்த அரும்பாவூர் காவல் ஆய்வாளர் அவர்கள் இன்று 11.11.2024-ஆம் தேதி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்" - என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர் பட்டியலினம் அல்லாத வேறு சாதியை சேர்ந்தவர் அல்ல. இந்த உண்மை வெளியான பின்னர், விசிகவும், ஊடகங்களும் ஆழ்ந்த மௌனத்தில் உள்ளனர்.
'அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சாதியவாதிகளை கைது செய்' என்று முன்கூட்டியே முடிவு செய்து, சாதிகளுக்கு இடையே கலவரத்தைத் தூண்டி, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயலும் விசிக + நீலம் பண்பாட்டு கும்பல் இப்போது அமைதி காப்பது ஏன்? குற்றவாளியின் சாதி எது என்பதை இப்போது அவர்கள் வெளிப்படையாக சொல்வார்களா?
அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்கிற முன்முடிவுடன் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?
சாதிக்கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிரான உண்மையை, மாதம் ரூ. 30 லட்சம் சம்பளம் வாங்கும், தமிழ்நாடு அரசின் #TNFactCheck அறிவிக்காதது ஏன்? சாதிக்கலவரங்கள் நடக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் விருப்பமா? என்று அருள் இரத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Caste politics VCK Pa Ranjith Fake News