நான் நலமாக இருக்கிறேன் - வீடியோ வெளியிட்ட மருத்துவர் பாலாஜி..! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி அரசு தலைநகர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை வழியாக அளித்த வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த நிலையில் தான் நலமாக இருப்பதாக கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கூறும் மருத்துவர் பாலாஜி, தான் நலமாக இருப்பதாகவும், காலை உணவு சாப்பிட்டதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கு அவர் நன்றியும் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor balaji says iam fine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->