கொசு வலை : மேயர் பிரியாவுடன் இணைந்து வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சென்னையில் விட்டு விட்டு தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. சுமார் 2 அடி வரை தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், கனமழை காரணமாக சென்னை மாங்காட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் சூழ்ந்துள்ளது. ஜனனி நகர், சாதிக் நகர், சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம்பரத்தில் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதால், கிழக்கு தாம்பரம் சுத்தானந்த பாரதி சாலை, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை, திரு.வி.க.நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai CM Stalin Mayor Priya Visit Rain Floods Ares


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->