சென்னை வாசிகளே.. அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா - தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் ஓவ்வொரு வருடமும் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

காலை 8.30 மணிக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்படும் இந்த ஆன்மிக சுற்றலா பயணம் மாலை 7 மணி வரை அம்மன் கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு தரப்படுகிறது. 

எந்தந்த அம்மன் கோவில்கள்:

சென்னை பாரிமுனை-காளிகாம்பாள் கோவில், 
ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, 
திருவொற்றியூர் வடிவுடையம்மன், 
பெரியபாளையம் பவானி அம்மன், 
புட்லூர் அங்காள பரமேஸ்வரி, 
திருமுல்லைவாயல் திருவுடையம்மன் -பச்சையம்மன், 
கொரட்டூர் செய்யாத்தம்மன், 
வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். 

மேலும் இந்த ஆன்மிக சுற்றுலாவில் மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணம் ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.

மேலும் ஒரு ஆன்மிக சுற்றுலா திட்டம்: 

மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், 
முண்டககண்ணி அம்மன், 
கோல விழியம்மன், 
தி.நகர் ஆலயம்மன், 
முப்பாத்தம்மன், 
சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், 
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, 
மாங்காடு காமாட்சி அம்மன், 
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், 
கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்க ரூ.800 கட்டணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கிருந்து புறப்படும்:

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆன்மிக சுற்றலா பயணம் தொடங்கும்.

எப்படி பதிவு செய்வது: 

ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Devotees Aadi Amman Temples


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->