சென்னை : செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு.!
Chennai Flowers exhibition ended today
தமிழகத்தில் கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3ஆம் தேதி முதல் இன்று (5ம் தேதி) வரை 3 நாட்களுக்கு மலர்கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்திருந்தது.
அதன்படி பெங்களூர், உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு வந்து விதவிதமான டிசைன்களில் மலர் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இதற்கு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கப்பட்ட மலர் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
English Summary
Chennai Flowers exhibition ended today