15,16 &17 சென்னை மக்களே...! முதலமைச்சர் போட்ட உத்தரவு - அமைச்சர் கொடுத்த பேட்டி!
Chennai Heavy Rain Alert CM Order
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவிக்கையில், "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பருவமழைக்கு முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முழுவதும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தால் சமாளித்துக் கொள்ளலாம். ஒரே இடத்தில் அதிக மழை பெய்தால் சற்று சிரமம் தான்.
இது குறித்து முன்னெச்சரிக்கை தகவலை தெரிவிக்க வானிலை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அவசரக்கால செயல்பாட்டு மையம் மூலம் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள், உதவி தேவைப்படும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது போல் மழை பாதிப்பு இந்த முறை ஏற்படாது. அக்.15,16 &17 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
Chennai Heavy Rain Alert CM Order