சென்னையில் மீண்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை!
Chennai Heavy Rain Alert Tamilnadu
சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கி உள்ளது.
குறிப்பாக மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், மீனம்பாக்கம், பெரியமேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், புரசைவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதேபோல் மேடவாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், குரோம்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் என்று தமிழகத்தில் திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai Heavy Rain Alert Tamilnadu