மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை இன்று திறப்பு.!
Chennai Marina beach physical chalanger way today open
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணி தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபாதை 235 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் சுலபமாக நடக்க நடைபாதையின் இரு புறங்களிலும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லலாம்.
மேலும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சுலபமாக சென்று கடலின் அழகை ரசிக்கலாம்.
இந்த நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த நடைபாதியை திறந்து வைக்கின்றனர்.
English Summary
Chennai Marina beach physical chalanger way today open