வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை! அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட  துணை முதல்வர்! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பருவ மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீட்பு பணிகளுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்துவதுடன், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் whatsapp குழுக்களை அமைக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் எப்போதும் மக்களுடன் துணை நிற்கின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

பருவ மழை காலங்களில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு பெய்த அதிக கன மழை கால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும்,  மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai North East Monsoon DeputyCM Udhayanidhi Stalin Meeting


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->