சர்ச்சையில் சிக்கிய வானதி சீனிவாசன்!...வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குலத்தொழில் தொடர்பாக பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை என்றும், குலத்தொழிலை திமுக அனுமதிக்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். மேலும்,  விஸ்வகர்மா சமுதாயத்திற்குரிய பெருமையான விஷயத்தையே குலைக்க நினைக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்த அவர், விஸ்வகர்மா  பெருமையை குலைக்க நினைப்பவர்களை கேள்வி கேட்க யாராலும் முடியவில்லை என்று பேசியிருந்தார்.

மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும், விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறிய அவர்,  ஒவ்வொரு சாதிக்கும், ஒரு பெருமை இருப்பதை போல குலத்தொழிலுக்கும் பெருமை உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக  திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளதாவது, வானதி சீனிவாசனின் பேச்சு ஆணவத்தின் உச்சம் என்றும், குலத்தொழிலை பற்றி பேசும் அனைவரும் அவர்களின் குலத்தொழிலை செய்யப்பட்டும் என்று கூறியுள்ள அவர், வானதி தனது குலத்தொழிலை செய்ய தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும் வானதி  சீனிவாசன் பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi srinivasan caught in controversy netizens who buy white


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->