கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து கோவில் மீது மோதியதில், கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்பலத்தை சேர்ந்த வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூருக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

தொடர்ந்து காரானது கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக, ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பிய நிலையில், ஓ.எஸ்.மணியன், ஓட்டுநர் ஆகியோர் நாகை அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

மேலும் இந்த விபத்தின் காரணமாக  கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex minister involved in a car accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->