வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு சிறை.. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வசந்தகுமார் கடந்த 1991 முதல் 2000ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றியுள்ளார். மதுரை காவல்துறை உதவி ஆணையராக பணி ஓய்வு பெற்ற இவர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வசந்தகுமாருக்கு எதிராக சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வசந்தகுமாரை விடுவித்து கடந்த 2014ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. வருமானத்தை மீறி சொத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் மிகாததால் வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக கருத முடியாது எனக்கூறி வழக்கில் இருந்து வசந்தகுமாரை விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு மனு கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி இவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் வசந்தகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்தார்.

மேலும் வசந்தகுமாரை விடுதலை செய்து பிறப்பித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தும் முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் வசந்தகுமார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரத்திற்காக நேரில் ஆஜரான முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் வசந்தகுமாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC sentences ex police officer to 1year in jail in property case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->