முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்!
Chief Minister Defamation Ex minister appears in court
அ.தி.மு.க சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச், மே மாதங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை தலைவருமான சி.வி சண்முகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அங்கு அவர் பேசும்போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூராக பேசியதாக புகார்கள் எழுந்தனர்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் மீது, அரசு வக்கீலான சுப்பிரமணியன் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சி.வி. சண்முகம் இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
English Summary
Chief Minister Defamation Ex minister appears in court