நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீச்சு - ஆவேசத்தில் முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பொதுமக்கள் பார்வையாளராக அனுமதிக்கப்படுவது வழக்கம். அப்படி பார்வையாளராக வந்த 2 ஆண்கள் மற்றும் 2 பெண்களில் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்த ஒருவர் எம்பிக்களை நோக்கி ஓடியவர் கண்ணீர் புகையிலை வீசினார். 

இதைப்பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர். இதையறிந்த போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தின் முதலவர் மு.க ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது:- 

நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் கெடுபிடிகள், நமது ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது. தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உடனடி விசாரணையைத் தொடங்கவும், பொறுப்புக்கூறலைச் சரிசெய்யவும், எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், இந்த முக்கியமான நிறுவனத்தின் பாதுகாப்பை எங்கள் கட்டளையின் அனைத்து வலிமையுடன் உறுதிப்படுத்தவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister stalin tweet about tear gas attack in parliment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->