டெல்லிக்கு விரையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - இதுதான் காரணமா?
cm mk stalin going to delhi for visit pm modi
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்று 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி மீண்டும் அவர் சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்றுத் தெரிவித்தார்.
மேலும் பிரதமரை நேரில் சந்திக்க மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்த நிலையில், பிரதமர் அலுவலகம் அதற்காக நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
நாளை காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
English Summary
cm mk stalin going to delhi for visit pm modi