இரு கைகளை இழந்தும் 437 மதிப்பெண் எடுத்த மாணவன்.. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..!!
Cm ordered heath dept to reattach 10th class student who lost his hands
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் க்ரித்தி வர்மா என்ற மாணவன் இரு கைகள் இழந்த நிலையில் பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அந்த மாணவன் தனது பள்ளியில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பொதுத்தேர்வு செய்திகளை கவனிக்கும்போது மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றி செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். அவரது தாயாரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு கைகள் பொறுத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
நம்பிக்கை ஒளியென மின்னிடும் மீண்டும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிவுகள் பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Cm ordered heath dept to reattach 10th class student who lost his hands