பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்த முதல்வர் ஸ்டாலின் - இதுதான் காரணமா?
CM stalin press meet explain about avaoid interview in patna opposition meeting
பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்த முதல்வர் ஸ்டாலின் - இதுதான் காரணமா?
இன்று பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிகொள்வதுக் குறித்து பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், பகவந்த் மான், ஹேமந்த் சோரன் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலளித்ததாவது:-
செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை; கூட்டம் ஆரம்பம் முதல் நன்றி சொல்லி முடிக்கும் வரை இருந்தேன், அதற்கு பிறகு விமானத்திற்கு நேரம் ஆகிவிட்டது. அதனால், மதிய உணவுக்கூட சாப்பிடாமல் திரும்பி வந்துவிட்டேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
CM stalin press meet explain about avaoid interview in patna opposition meeting