கல்லூரி செல்வதற்காக சுடிதாரை அயன் செய்த மாணவி - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


கல்லூரிக்கு செல்வதற்காக சுடிதாரை அயன் செய்த மாணவி - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.! 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர் அருகே பிள்ளமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்வேதா இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு அவசரம் அவசரமாக புறப்பட்டுள்ளார். 

அந்த நேரத்தில் ஸ்வேதா, சுடிதாரை அயன் செய்வதற்காக ஈரக் கையுடன் அயன்பாக்ஸை தொட்டுள்ளார். அப்போது, அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், தூக்கி ஸ்வேதா தூக்கி வீசப்பட்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் ஸ்வேதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணியை அயன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died for electric shock attack in dindukal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->