தேர்வெழுதி கொண்டிருந்த மாணவி தற்கொலை முயற்சி - காரணம் என்ன?
college student tried sucide in chennai
சென்னையில் உள்ள புளியந்தோப்பு வ.உ.சி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழைய இரும்பு வியாபாரி தாஜூதீனின் மகள் ஹாசீயா. இவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதால், மாணவி ஹாசீயா கல்லூரிக்கு தேர்வெழுத சென்றுள்ளார்.
அதன் படி தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில், மாணவி ஹாசீயா திடீரென அறையில் இருந்து எழுந்து வந்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவி ஹாசீயாவின், சகோதரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அன்று முதல் துக்கம் தாளாமல் மன அழுத்தம் ஏற்பட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹாசீயா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மன அழுத்திற்கு ஆளாகி தொடர் சிகிச்சையில் இருந்து மாணவி ஹாசீயா இன்று கல்லூரிக்கு தேர்வெழுத வந்த நிலையில், திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student tried sucide in chennai